தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனைத்து பயிற்சி நிலையங்களிலும் நடாத்தப்படுகின்ற பாடநெறிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கால வரையறைக்குள் இறுதிப் பரீட்சைகளை நடாத்துதல்.
இறுதிப் பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு மாதங்கள் முடிவதற்கு முன்னர் உரிய சான்றிதழ்களை பயிலுனர்களுக்கு வழங்குதலும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தை நடாத்துதலும்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடாத்தப்படுகின்ற திறன் விருத்தி பாடநெறிகளுக்கான மதிப்பீடுகளை நடாத்துவதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படுகின்ற தேசிய தொழில் தகைமை சான்றிதழை (NVQ Certificate) வழங்குதல்.
அதன் மூலம் தொழில்சார் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற இளைஞர் யுவதிகள் விரைவாகத் தொழிலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். (OJT)
NVQ தரம் அல்லாத பாடநெறிகளுக்கான பாடவிதானங்களைத் தயாரித்தலும் அவற்றை பயிற்சி நிலையங்களுக்கு அனுப்புதலும்.
தொழில்சார் அனுபவங்களைக் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்சார் சான்றிதல்களை (NVQ) வழங்குவதற்காக (RPL) முறையை நடைமுறைப்படுத்துதலும் மாகாண மட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்குதலும்.
தேர்வு மற்றும் மதிப்பீட்டு பிரிவு,
தேசிய இளைஞ்சர் சேவைகள் மன்றம் ,
இலக்கம் 65,
ஹைலெவல் வீதி,
மகரகமை.