1983 மே மாதம் 23ஆந் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்.
இளைய தலைமுறையினர் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தக்கதாகவும், இளைஞர்களது தேவைகளை ஆட்சியதிகாரத்திலுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்வதற்கெனவும், கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு செல்லக்கூடியவாறு, இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பொன்றின் தேவைப்பாடு காணப்பட்டதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களது கட்டளையின் பிரகாரம் தாபிக்கப்பட்ட இளைஞர் கழக நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தேசிய மட்டத்திலான இளைஞர் கழக சம்மேளனம் தாபிக்கப்பட்டது.
இது செம்மஞ்சள் நிற பின்னணியைக் கொண்டிருக்கும். இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடியை முன்னிலைப்படுத்தி நெற் கதிர்களையும் தீச்சுடரையும் ஏந்திய இளைஞனையும் யுவதியையும் உள்ளடக்கியவாறு இளைஞர் கழக இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் தாபிக்கப்பட்ட தினமான மே மாதம் 23 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு 1999 மே மாதம் 23 ஆம் திகதியானது தேசிய இளைஞர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஒரு கிராம அலுவலர் பிரிவே இளைஞர் கழகத்தின் அதிகாரப் பிரதேசமாகக் கருதப்படுகின்றது. 13 - 19 வயதிற்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இளைஞர் கழகங்களில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பொதுச் சபைக் கூட்டத்தில் 09 பேரைக் கொண்ட உத்தியோகத்தர் குழாம் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் தலைவராக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் செயற்படுவார். (இளைஞர் கழகமொன்றத் தாபிப்பது தொடர்பாக அல்லது இளைஞர் கழகம் தொடர்பாக வேறு விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, புதன் கிழமைகளில் தமது பிரதேச செயலகத்திலுள்ள இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரை சந்தித்து அறிந்து கொள்ளலாம்.)
இளைஞர் கழக அங்கத்தவராகிய நான் ஒற்றுமை, நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு வித உறுதிப்பாட்டுக்கு அமைந்து செயலாற்றுவேன்.
தாபிக்கப்பட்ட திகதி - 1979 யூன் மாதம் 03 ஆந் திகதி
மாவட்டம் - கேகாலை
தேர்தல் தொகுதி - தெதிகம
கிராம அலுவலர் பிரிவு - அல்கம
இளைஞர் கழகத்தின் பெயர் - நிவஹல்
1979 ஆம் ஆண்டு 69 ஆம் இழக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் 5(2)( இ)ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞர் கழகங்களைத் தாபித்து, அவற்றை பதிவு செய்வதின் கீழ் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமானது இளைஞர் அமைப்பாகத் தாபிக்கப்பட்டுள்ளது.
1986.05.30 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1979ஆம் ஆண்டு 28ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 31 (9) (அ)ஆம் பந்தியின் கீழ் அங்கீகரிக்கப்பாட்ட தொண்டு நிறுவனமாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு 137 ஆம் இலக்க அரச சார்பற்ற சமூக சேவைகள் அமைப்பாக 11/4/1/515/85 ஆம் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் யுவதிகளது தலைமைத்துவ திறன்களை விருத்தி செய்தல்.
விளையாட்டுத் திறன்களை விருத்தி செய்தல்.
கலைத் திறன்களை விருத்தி செய்தல்.
தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.
சமூக நலனோம்பல் நிகழ்சிகளை முன்னெடுத்தல்.
நாட்டிலுள்ள இளைஞர்களது பிரச்சினைகளுக்கு முன்னின்று செயற்படல்.
தலைமைத்துவப் பயிற்சி
உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர் பரிமாற்றல் நிகழ்ச்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல்.
இளைஞர் பாராளுமன்றம்.
அறிவிப்பாளர் குழாமில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம்.
ஆளுமை விருத்தி.
தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.
தொழிற்பயிற்சிக்கான வழிகாட்டல்கள்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழா மூலம் தமது திறமைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் ஏற்படுத்துதல்.
இளைஞர் விருது வழங்கல் போட்டி மூலம் கலைத்திறன்களை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
NYSCO இளைஞர் கூட்டுறவு சங்கம் ஊடாக சுயதொழிலுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
Youth Got Talent நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட திறமைகளை கொண்ட இளைஞர்களுக்கு விருது வழங்குதல்.
13 - 29க்கு இடைப்பட்ட நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கு இந்நன்மைகள் வழங்கப்படுகின்றன.
கிராமிய மட்டத்தில் ஒழுங்கு செய்யப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கு பிரதேச செயலகத்தில் சேவையாற்றுகின்ற இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் கழக பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் ஊடாக விளக்கமளிக்கப்பட்டு இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தல்.
தேசிய மட்டத்தில் மாவட்ட ரீதியாக இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சபைகள் மற்றும் இளைஞர் கழக மாவட்ட சபைகள் ஊடாக அங்கத்தவர்களுக்கு உரிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இளைஞர் கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மனித குலத்தின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த, நிறைவான ஆளுமையைக் கொண்ட, ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட நாட்டுப்பற்றுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
இனம், மதம், மொழி, அரசியல் பேதங்களின்றி அனைத்து இளைஞர்களும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படத்தக்க விதத்தில் அவர்களிடையே ஒற்றுமையையும், நட்பையும், ஒத்துழைப்பு மனப்பான்மையையும் கட்டி எழுப்புதல்.
இளைஞர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
தேசிய அபிவிருத்திக்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார,தேவைப்பாடுகள் தொடர்பான விளக்கத்தை இளம் சமுத்தாயத்தினருக்குப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அது தொடர்பாக நேர்மறையாகச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டுதல்.
கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார மற்றும் ஆற்றல் விருத்திக்கும் அவற்றைப் பேணிப்பாதுகப்பதற்கும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தல்.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்துதலும் தொண்டர் சேவைகளில் அவர்களை ஈடுபடுத்துதலும்.
சனநாயக வாழ்க்கை முறைக்கு இளைஞர்களை பழக்கப்படுத்துதல்.
இளைஞர் யுவதிகளது ஓய்வு காலத்தை சிறந்த வகையிலும் வினைத்திறனான வகையிலும் செலவழிப்பதற்கும் அவர்களது ஆற்றல்களையும் திறமைகளையும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
இளைஞர் யுவதிகளது ஆளுமையை விருத்தி செய்தலும் அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குதலும்.
இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்ச்சிகளை வழங்குதல்.
இளைஞர் யுவதிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு ஊக்குவித்தல்.
ஒரு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், உப தலைவர், உப செயலாளர் போன்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச சம்மேளனத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகளது இரகசிய வாக்கெடுப்பு மூலம் இளைஞர் கழக பிரதேச சம்மேளனம் தெரிவு செய்யப்படும். பிரதேச சம்மேளனத்தின் நிருவாக சபை 15 பேர்களைக் கொண்டிருக்கும். பிரதேச சம்மேளனத்தின் செயலாளராக பிரதேச செயலகத்தில் உள்ள இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் செயற்படுவார்.
இலங்கையில் 25 நிருவாக மாவட்டங்கள் காணப்படுவதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிருவாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவற்காக, கொழும்பு மாவட்டம் மட்டும் இரண்டு மாவட்டங்களாகப் பெயரிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகளுக்காக 26 மாவட்டங்கள் செயற்படுகின்றன. இளைஞர் கழக மாவட்ட சம்மேளனமானது மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயற்படுவதுடன் அது பிரதிநிதித்துவ சம்மேளனமாகும். இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்திற்கு அழைப்பு விடுப்பவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தராவார். அவர் அதன் செயலாளருமாவார். மாவட்டத்தில் தாபிக்கப்பட்ட இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர்கள் அல்லது செயலாளர்கள் மற்றும் இளைஞர் கழக பிரதேச சபைகளது தலைவர்கள், பொருளாளர்கள் அல்லது அமைப்பாளர்களிலிருந்து இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை நியமிக்கப்படுகின்றது. இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் நிருவாக சபையானது 18 பேரைக் கொண்டிருக்கும்.
இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் மிகப் பெரிய அமைப்பாக தேசிய சபை காணப்படுகின்றது. இளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சபைகளில் தலைமைத்துவத்தை ஏற்று மாவட்ட மட்டம் வரை வந்த இளைய தலைவர்கள் 52 பேர் (ஒரு மாவட்டத்தில் இரண்டு பேர் வீதம்), 26 இளைஞர் கழக மாவட்ட சம்மேளனங்களின் 26செயலாளர்கள், (இவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களாவர்), தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரால் நியமிக்கப்படுகின்ற 09 பிரதிநிதிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நிருவாக செயலாளராக கௌரவ தலைவரால் நியமிக்கப்படுபவர், உள்ளிட்ட தேசிய சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 89 ஆகும். (கௌரவ தலைவருடன் சேர்த்து)
No. | Post | Name |
---|---|---|
1. | Hon. Chairman | -- |
2. | Vice Chairman 1 | -- |
3. | Administrative Secretary | -- |
4. | Secretary | Mr. Shehan Koshila kannangara |
5. | Vice Chairman II | Mr. K.Yshodaran |
6. | Vice Chairman III | Mr. A.A.Chamara Prasad Amarasinghe |
7. | Treasurer | Ms. U.L.S.Hashani Perera |
8. | Organizer | Mr. K.W.J.Praboda Navindra |
9. | Assistant Organizer | Mr. Ravindran Komalaraj |
10. | Deputy Secretary I | Mr. A.P.Neranjan Pradeep Wickramasinghe |
11. | Deputy Secretary II | Mr. S.Kushan Madusanka Jayarathne |
12. | Chairman,Education, Training and Counseling Bureau | Miss. S.Shanika Maduwanthi Suraweera |
13. | Chairman,Planning and Research Bureau | Mr. S.M.Shashin Milinda |
14. | Chairman,National Development Bureau | Mr. S. Janagan |
15. | Chairman,Sports and Diverse External Activities Bureau | Mr. W.Amal Pradeep Navinda |
16. | Chairman,Cultural Affairs Bureau | Mr. T. Umakanthan |
17. | Chairman,Presentation of Awards Bureau | Mr. A.M. Tharindu Navin Kumara |
18. | Chairman,Foreign Bureau | Mr. G.B.Hasith Sandaruwan |
19. | Chairman,Communication, Extension, and Youth Relations Bureau | Mr. T.Vimalaraj |
20. | Chairman,Social Services and Welfare Bureau | Mr. Y.M.Dilanjana Saliya Yapa |
21. | Chairman,Funds Bureau | Mr. H.P.Gayashan Sachiranga |
22. | Chairman,Entrepreneurship and Business Development Bureau | Mr. R.M.Tharindu Gayan Madusanka |
23. | Chairman,Earth Conservation Bureau | Miss. M.G.Deshani Dilanka Wijesooriya |
24. | Chairman,Civil Organizations Coordination Bureau | Mr. W.K.Janith Vimukthi Akalanka |
இலங்கை இளைஞர் கழக சம்மேளனம்,
இலக்கம் 65,
ஹைலெவல் வீதி,
மகரகமை.