கலாச்சார பிரிவு

இளைஞர் விருது விழா 2020

இளைஞர் விருது விழா

15 – 29 வயது வரையுள்ள இளைஞர்களின் ஆக்கத் திறன்களையும், வளர்ந்து வரும் கலை ஆர்வமிக்க படைப்பாற்றல் மிக்க இளைஞர்களையும் அடையாளங்கண்டு கொள்ளுதல், மதிப்பீடு செய்தல், அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் இளைஞர்களுக்காக தேசிய இளைஞர் விருது வழங்கும் விழாவை வருடாந்தம் நடாத்தப்படுகின்றது.

சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி மூலம் வித்தியாசமான திறமைகளைக் கொண்ட போட்டிகளாக நடனம், சங்கீதம், இலக்கியம் மற்றும் வேறு 64 துறைகளைக் கொண்டு இந்த போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் 3 கட்டங்களாக நடாத்தப்படுகின்ற இந்த போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை உங்களது பிரதேச செயலகத்தில் உள்ள இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கவும்.

விண்ணப்ப படிவம்நாடகமும் அரங்கியலும் டிப்ளோமா பாடநெறி (நாடகப் பள்ளி)

நாடளாவிய ரீதியில் நாடகக் கலையில் ஆர்வம் காட்டுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு நாடகக் கலை அதாவது,

மேற்கண்ட துறைகளில் முறையாகக் கற்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடகமும் அரங்கியலும் டிப்ளோமா பாடநெறியானது மிகப் பொருத்தமான தெரிவாகும். இந்நாடகப் பள்ளியானது 1998.07.15ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியில் செயன்முறைப்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் எண்ணக்கரு தொடர்பான விரிவுரைகளும் இடம்பெறுகின்றன. பிரசித்திபெற்ற கலைஞர்களாலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. இது 06 மாத முழு நேர டிப்ளோமாப் பாடநெறியாக நடாத்தப்படுகின்றது. இப்பள்ளியில் பயின்று தற்போது பிரசித்தி பெற்றுள்ள சில பிரபலங்களைக் கீழே காணலாம்.

 1. பிரபல நாடகக் கலைஞர் சுசித் ரத்நாயக

 2. பிரபல நாடகக் கலைஞர் மாதனி மல்வத்த

 3. பிரபல நாடகக் கலைஞர் ரொஷான் ரவீந்திர

 4. பிரபல நாடகக் கலைஞர் சம்பத் ஜயவீர

 5. பிரபல நாடகக் கலைஞர் மிஹிர சிரிதிலக

 6. பிரபல நாடகக் கலைஞர் சரத் கருணாரத்ன

 7. பிரபல நாடகக் கலைஞர் ஹர்ஷ தென்னகோன்

போன்றோர் இந்நாடகப் பள்ளியில் உருவாகி சின்னத் திரையிலும் மேடை நாடகங்களிலும் வெள்ளித்திரையிலும் கொடிகட்டிப் பறப்பவர்களில் ஒரு சிலராவர். இளைஞர் யுவதிகளே! நீங்களும் நாடகக் கலையின் மூலம் தேசிய மட்டத்தில் சிறந்த நாடகக் கலைஞர்களாக உருவெடுப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பாதை சமைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்படவிருக்கின்ற 35 இளைஞர் யுவதிகளுள் நீங்களும் ஒருவராக இப்போதே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்ப படிவம்நுண்கலையியல் மூன்று வருட (டிப்ளோமா) பாடநெறி
இசை (டிப்ளோமா) பாடநெறி

வாய்ப்பாட்டு/இசைக்கருவி என்பவற்றில் ஆர்வம் காட்டுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு அத்துறையில் முன்னேறிச் செல்வதற்கும், அத்துறையில் நிபுணத்துவமிக்கவர்களாக மாறுவதற்கும், இப்பாடநெறிகளை முழுமையாகக் கற்பதற்கும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பெல்வுட் நுண்கலை நிலையம், எரமினியாய நுண்கலை நிலையம், மகரகமை இளைஞர் நிலையம் ஊடாக இந்த சங்கீத மூன்று வருட டிப்ளோமாப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக பெல்வுட் நுண்கலை நிலையத்தில் பயின்று இன்று பிரபலங்கலாகத் திகழும் இசைமேதைகளில் சிலர் கீழே குறிப்பிடப்படுகின்றனர்.

 1. பிரபல பாடகர் சோமசிறி மெதகெதர

 2. பிரபல பாடகர் சந்திரசேன ஹெட்டியாராச்சி

 3. பிரபல பாடகர் சந்தன லியனாராச்சி

 4. பிரபல பாடகர் சந்திரலேகா பெரேரா

 5. பிரபல பாடகர் ரோய் பீரிஸ்


அவ்வாறே வாத்தியத் துறையில் பிரபலம் பெற்றவர்கள்

 1. பிரபல வாத்தியக் கலைஞர் ஜயந்த திசாநாயக

 2. பிரபல வாத்தியக் கலைஞர் ரஞ்சித் அபேனந்த

 3. பிரபல வாத்தியக் கலைஞர் நுவன் சமரசிங்க

 4. பிரபல வாத்தியக் கலைஞர் சரத் தர்மதாச

 5. பிரபல வாத்தியக் கலைஞர் மகிந்த ஜயங்கர என்போரைக் குறிப்படலாம்.


தற்போது தேசிய மட்டத்தில் தகைமைகளைப் பெற்ற விரிவுரையாளர்களால் இப்பாடநெறிக்கான விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. வருடாந்தம் கீழே காட்டப்பட்ட பாடநெறிகளுக்கென 85 விண்ணப்பதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கீழைத்தேய சங்கீதம், மேலைத்தேய சங்கீதம், கர்னாடக சங்கீதம் போன்ற பாடநெறிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றார்கள். இதற்கு ஒப்பாக எரமினியாய நுண்கலை நிலையம், மகரகமை நுண்கலை நிலையத்தினூடாகவும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.


நடன டிப்ளோமா பாடநெறி

நடனத் துறையில் பிரகாசிக்க நினைக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். உயர்தரத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காத இளைஞர் யுவதிகளுக்கு இது அரியதொரு சந்தர்ப்பமாகும். தேசிய மட்டத்தில் மூன்று வருட டிப்ளோமா பாடநெறியை இலவசமாக வழங்கும் ஒரே நிறுவனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமாகும். முதலாவதாக விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டு தகைமையுடையவர்கள் தெரிவு செய்யப்பட்டு செயன்முறைப் பரீட்சையின் பின்னர் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். வருடாந்தம் 50 என்ற எண்ணிக்கையில் வரையறுக்கப்பட்ட மாணவர்களே, மிகுந்த போட்டியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

நடனப் படநெறியானது உள்நாட்டு/வெளிநாட்டு நடனம், பாடல், வாத்தியக் கருவிகளை இசைக்கும் திறமை போன்ற பல்வேறு துறையில் முழுமையடையும் நீங்கள் ஒரு கலைஞராக பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற முடிவதுடன் அது உங்களது தொழில் துறைக்கும் மிகுந்த பயனுடையதாக அமையும். விசேட திறமைகளைக் கொண்டுள்ள நீங்கள் உள்நாட்டு / வெளிநாட்டு சுற்றுலாக்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கும்.

ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட சிறந்த நடனக் கலைஞர்களை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கமாகும். 3 தசாப்த காலமாக நடந்து வருகின்ற இந்த நடனப் பாடநெறி மூலம் திறமையான பல நடனக் கலைஞர்கள், ஆசிரியர்கள், நடனப் பள்ளிகள், ஆடை வடிவமைப்பாளர்கள், உரையாசிரியர்கள் சர்வதேச ரீதியில் மிகுந்த பிரசித்தி பெற்ற திறமையான கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மாணவர் படையணிகளில் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்கள், பொலிஸ், கடற்படை, விமானப் படை, இராணுவப் படைகளது நடனக் குழுக்களுக்களிலும், அரச நடனக் குழுக்களிலும் எமது நடனக் கலை பயின்ற மாணவர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றார்கள். சர்வதேச பாடசாலைகளிலும் இவர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப படிவம்தேசிய இளைஞர் நாடக போட்டிகள்

நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் நாடகக் கலைஞர்கர்கள் ஒரே மேடையில் தோன்றி தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துக் காட்டும் போட்டி நிகழ்ச்சியே இந்த தேசிய இளைஞர் நாடக போட்டிகளாகும். ஆண்டுக்கொருமுறை கிராமிய மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை இளைய நாடகக் கலைஞர்களை அழைத்து வந்து தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டி நிகழ்ச்சியின் மூலம் கலைஞர்களை இவ்வுலகத்திற்கு வெளிக்காட்டுவதே எமது இப்போட்டியின் நோக்கமாகும். இது 3 கட்டங்களைக் கொண்டது.

 1. விண்ணப்பங்களைக் கோருதல்.

 2. மாகாண மட்டத்தில் போட்டிகளை நடாத்துதல்.

 3. தேசிய மட்டத்தில் நாடகப் போட்டிகளை நடாத்துதல்.


வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். 37 வருட காலமாக இடம்பெற்று வரும் இந்த தேசிய இளைஞர் நாடக போட்டிகள் மூலமாக வெளிக்கொணரப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் சில பிரபலங்களைக் கீழே குறிப்பிடுகின்றோம்.

 1. பிரபல நாடகக் கலைஞர் சிரியந்த மென்டிஸ்

 2. பிரபல நாடகக் கலைஞர் எச்.ஏ.பெரேரா

 3. பிரபல நாடகக் கலைஞர் தீபாணி சில்வா

 4. பிரபல நாடகக் கலைஞர் நலீன் பிரதீப் உடவெல

 5. பிரபல நாடகக் கலைஞர் சரத் கொத்தலாவல

 6. பிரபல நாடகக் கலைஞர் ஜயனி சேனாநாயக

 7. பிரபல நாடகக் கலைஞர் துலீகா மாரபண

 8. பிரபல நாடகக் கலைஞர் பிரசன்னஜித் அபேசூரிய

 9. பிரபல நாடகக் கலைஞர் சௌமிய லியனகே

 10. பிரபல நாடகக் கலைஞர் மிஹிர குணதிலக

 11. பிரபல நாடகக் கலைஞர் மாதனீ மல்வத்த

 12. பிரபல நாடகக் கலைஞர் சுமித் ரத்னாயக்க

 13. பிரபல நாடகக் கலைஞர் சம்பத் ஜயவீரContact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5095484