நிதிப் பிரிவு


பணிப்பாளர் (நிதி)

பிரதிப் பணிப்பாளர் (நிதி)

இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டு 69ஆம் இலக்க தேசிய இளைஞர் சேவைகள் சட்டத்திற்கமைவாக இம்மன்றம் தாபிக்கப்பட்டதன் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, 1971ஆம் ஆண்டு 38ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டியதுடன், இந்நிதிப் பிரிவிற்கு கணக்கீட்டு உத்தியோகத்தருக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் உண்டு.


நிதிப் பிரமாணங்கள் மற்றும் தாபன விதிக் கோவைகளுக்கு அமைய கடமைகளை மேற்கொள்ளுதல் மற்றும் திரைசேரியினாலும், முகாமைத்துவ திணைக்களத்தினாலும் வெளியிடப்படுகின்ற சுற்றறிக்கைகளைப் பின்பற்றி கணக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் இப்பிரிவின் பிரதான கடமையாகும்.


ஒழுங்கமைப்பு கோட்டுப் படத்தில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள விதத்தின் அடிப்படையில் பதவிக்குரிய பொறுப்புக்களை சரியாக அறிந்து கொள்ளுதல் மற்றும் செயற்படுத்துதல், வருட இறுதியில் கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து, கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் திறைசேரிக்கும் அனுப்ப வேண்டிய பிரதான பொறுப்பு இப்பிரிவையே சாரும்.நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும் மூலங்கள்

 • பொதுத் திறைசேரி

 • உள்ளக வருமானம்


நிதிப் பிரிவின் கடமைப் பொறுப்புக்கள்

 • பொதுத் திறைசேரியிலிருந்து கிடைக்கபெற்ற மீண்டெழும் மற்றும் மூலதன ஒதுக்கீடுகளை கீழே காட்டப்பட்டுள்ள விதத்தில் செலவு செய்தல்.

 • தனிநபர் சம்பளங்களும் வேறு மீண்டெழும் செலவினங்களும்.

 • சொத்துக்களைக் கையகப்படுத்துதல், சொத்துக்களைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.

 • இளைஞர்களை அபிவிருத்தி செய்தல்.

 • அனைத்து பெறுவனவுகளையும் கொடுப்பனவுகளையும் காசுப் புத்தகத்தில் பதிவு செய்தல்.

 • காலாண்டு நிதி அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.

 • அனைத்து வருமான சேகரிப்புகளையும் கணக்கு வைத்தல்.

 • வருடாந்த சொத்துக்களைக் கணக்கிடுதல்.

 • வருட இறுதியில் இறுதிக் கணக்குகளைத் தயாரித்து அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் திறைசேரிக்கும் அனுப்புதல்.2979883