1971ஆம் ஆண்டு 38ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நி.பி.133 மற்றும் 134 இன் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், இந்த உள்ளகக் கணக்காய்வு அலகு தாபிக்கப்பட்டுள்ளதுடன், அச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வருடாந்த கணக்காய்வுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்தக் கணக்காய்வுத் திட்டத்திற்கமைய 10 மாகாண அலுவலகங்கள், 26 மாவட்ட அலுவலகங்கள், 47 பயிற்சி நிலையங்கள் மற்றும் விவசாயப் பன்னைகளது நிதி, நிருவாக நடவடிக்கைகளைப் பரிசோதித்தல்.
1971ஆம் ஆண்டு 38ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வெளியிடப்படுகின்ற 1 4 (2) C மற்றும் 1 3 (7 ) A அறிக்கைகளுக்கான பதில் அறிக்கைகளைத் தயாரித்தல்.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வெளியிடப்படுகின்ற கணக்காய்வு ஐய வினாக்களுக்கான அவதானிப்புக்களையும், விடைகளையும் உரிய விடயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளருக்குச் சமர்ப்பித்தல், விடைகளைப் பெற்றுக் கொள்ளுதல், அவற்றை அறிக்கையாகத் தயாரித்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்புதல்.
பொது முயற்சிகள் கணக்குக் குழுவிற்கு உரிய அறிக்கைகளை தயாரித்து அனுப்புதல்.
பொது முயற்சிகள் கணக்குக் குழுவின் விதப்புரைகளது முன்னேற்றம் தொடர்பில் விசாரித்தல் மற்றும் உரிய முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து அனுப்புதல்.
கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டங்களைக் கூட்டுதல், நடாத்துதல், உரிய விதப்புரைகளை சபை பணிப்பாளர் குழுவிற்கு அனுப்புதல்.
நிரல் அமைச்சுகளின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டங்களது விதப்புரைகள் தொடர்பாக அறிக்கைகளைத் தயாரித்தலும் கூட்டங்களுக்குச் சமூகமளித்தலும்.
பணிப்பாளர் நாயகத்தின் கட்டளையின் பிரகாரம் விசேட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் உரிய அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தலும்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழுள்ள நிறுவனங்களில் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இலக்கம் | பதவி | பெயர் | தொலைபேசி இலக்கம் |
---|---|---|---|
1. | பிரதான உள்ளக கணக்காய்வாளர் | -- | -- |
2. | பிரதான உள்ளக கணக்காய்வாளர் | திருமதி.சீ.கே.ஹேரத் | 072-3403640 |
3. | கணக்காய்வு உத்தியோகத்தர் | திருமதி. எஸ்.எம்.விதானகே | 072-5545185 |
4. | கணக்காய்வு உத்தியோகத்தர் | திருமதி.லக்ஷானி பத்திரன | 077-3687215 |
5. | கணக்காய்வு உத்தியோகத்தர் | திரு.டப்.எம்.எம்.சம்பத் | 077-9550631 |
6. | கணக்காய்வு உத்தியோகத்தர் | திரு.பீ.பீ.கே.வன்னியாராச்சி | 071-8875627 |
7. | கணக்காய்வு உத்தியோகத்தர் | திரு.பீ.ஏ.டீ.ஏ.ஜே.குணதிலக | 071-8387443 |
8. | கணக்காய்வு உத்தியோகத்தர் (ஒப்பந்த) | திருமதி.எம்.சீ.கே.ராமநாயக | 071-9371443 |
9. | முகாமைத்துவ உதவியாளர் | திருமதி.கங்கா ருவினிகா குமாரசிறி | - |
10. | முகாமைத்துவ உதவியாளர் | திரு.ஆர்.பீ.ஆர்.தம்ம | 070-3450387 |
11. | அலுவலகப் பணியாளர் | திரு.சம்பத் ரூபசிங்க | 071-6681801 |
உள்ளக கணக்காய்வு மற்றும் விசாரணை பிரிவு,
தேசிய இளைஞ்சர் சேவைகள் மன்றம் ,
இலக்கம் 65,
ஹைலெவல் வீதி,
மகரகமை.