ஊடகப் பிரிவு

70களின் தசாப்தத்தில் இளைஞர் சேவைகள் மன்றம் தாபிக்கப்பட்டதன் பின்னர், இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்களை அறிவுறுத்துவதற்காக ஊடகப் பிரிவு தாபிக்கப்பட்டது.


இது முன்னர் ஊடகம் மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவு என்ற பெயரில் அழைக்கப்பட்டதுடன் ‘டி பொன்சேகா வீதியில்’ அமைந்திருந்த ஒருசில பிரிவுகளுள் இப்பிரிவானது முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.


ஒரு உதவிப் பணிப்பாளர், ஒரு பிரச்சார உத்தியோகத்தர், ஒரு தட்டெழுத்தாளர், மூன்று எழுதுவினைஞர்கள், ஒரு சினிமா இயந்திர இயக்குனர், ஒரு ஒலிபெருக்கி இயக்குனர், ஒரு அலுவலக உதவியாளர் என்போர் இப்பிரிவின் ஆரம்ப கால ஆளணியினராவர். தொடக்க காலங்களில் உருவான தேசிய சேவைகள் நிகழ்ச்சிகளின் இடைவெளி நேரங்களில் ஒலிபரப்புவதற்கு, இளைஞர் யுவதிகளுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிகழ்ச்சிகள் தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கான விவரணப் படங்களைத் தயாரித்ததுடன், சிங்களத் திரைப்படங்களைத் திரையிடும் நடவடிக்கைகளையும் இவ்வூடகப் பிரிவு எடுத்திருந்தது. இதற்குப் புறம்பாக, இப்பிரிவில் காணப்பட்ட சினிமா வாகனமானது தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக கிராமப்புற இளைஞர் யுவதிகள் அறிவுறுத்தப்பட்டனர்.


அவ்வாறே, பத்திரிகைகள், அரச வானொலிகள் மூலமாக இச்சபையின் நிகழ்ச்சிகள் தொடர்பான பிரச்சாரங்களை வழங்கும் நடவடிக்கையும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.


பிற்காலங்களில் தொலைகாட்சி ஊடகங்களைப் போன்றே, FM அலைவரிசைகளது ஒலிபரப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பரந்து விரிவடைந்த இச்சபையின் நிகழ்ச்சிகள் தொடர்பாக பரவலான ஊடக பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.


இதற்குப் புறம்பாக ‘யௌவனய’ (இளமை), ‘யோவுன் முல்’ (இளம் வேர்) போன்ற சஞ்சிகைகளை வெளியிடுதல், செய்திப் பத்திரிகைகளை அச்சிடுதல், வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் என்பனவும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.


தற்காலத்தில் பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், ஊடகங்கள் என்பனவற்றை ஒருங்கிணைத்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனைத்து நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் பரவலான ஊடக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், நினைவு மடல்கள், அழைப்பிதழ்கள், பதாதைகள், சுவரொட்டிகள், கையேடுகள், விளம்பரங்கள், டீ ஷர்ட், தொப்பி, பதக்கம், பத்திரிகை விளம்பரங்கள் என்பனவும் இவ்வூடகப் பிரிவினால் தயாரிக்கப்படுகின்றன.Contact Us

  • No 65, High Level Road,
  • Maharagama
  • +94 0112 850 986
  • info@nysc.lk
5095469