நிஸ்கோ வீடியோ பிரிவு

நிஸ்கோ வீடியோ பிரிவின் நோக்கு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கினை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இளைஞர்களிடையே மறைந்துள்ள ஊடகத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அதனை விருத்தி செய்வதன் ஊடாக சிறந்த தொலைகாட்சி ஊடக தொடர்பாடல் நிபுணர்களை உருவாக்குதல்.


பணிநோக்கு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொடர்பாக மக்களையும் இளைஞர்களையும் அறிவுறுத்தி, சர்வதேச ரீதியில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்நாட்டிற்கு வழங்குவதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் அறிவினையும் அனுபவத்தினையும் வழங்குதல்.


initiated

நிஸ்கோ வீடியோ பிரிவானது 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.


பின்னணி

போட்டி மிக்க இவ்வர்த்தக உலகில் இலங்கை வாழ் இளைஞர்கள் பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் தமது திறமைகளை வெளிக்கொணர முடியாத சூழ்நிலையொன்று காணப்பட்டது. அத்தகைய சூழ்நிலையொன்றில் அரச நிறுவனமொன்றின் தலையீடு அவசியமாக இருந்தது. அச்சந்தர்ப்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நிஸ்கோ வீடியோ பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.


நோக்கம்
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கத்தையும் பணிநோக்கத்தையும் அடைந்து கொள்வதற்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கங்களுக்கு அமைவாகவும் நிஸ்கோ வீடியோ பிரிவின் நோக்கத்துக்கு அமைவாகவும் இலங்கைவாழ் இளைஞர்களது அபிவிருத்திக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துதல்.

 • அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களின் மூலமாக உரிய படக்காட்சிகளைப் பயன்படுத்தி தொலைகாட்சி மற்றும் வெகுசன ஊடகத்துறை தொடர்பாக இளைஞர்களை அறிவுறுத்துதல்.

 • இளைஞர்களது அபிவிருத்திக்காக நிறைவேற்றப்படுகின்ற செயற்பாடுகளை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்.

 • திறமைமிக்க இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை தொலைகாட்சி வழியாக தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்.

 • இலங்கையிலுள்ள இளைஞர்களது பொருளாதார, சமூக, அரசியல், ஆன்மீக அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் பயன்பாட்டுக்கு எடுப்பதற்காக பாதுகாத்தல், தேவையானபோது உரியவர்களுக்கு வழங்குதல்.


இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள்
 • நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்தல்.

 • ஒளிப்பதிவு செய்த காட்சிகளை பாதுகாத்தல்.

 • நிகழ்ச்சிகளை பாதுகாத்தல்.

 • செய்திகளை படம்பிடித்தல்.

 • தேவையான சந்தர்ப்பத்தில் வீடியோ காட்சிகளை காட்சிப்படுத்துதல், தேவையான உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்சிகளுக்கும் அவற்றை வழங்குதல்.

 • நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களை வழங்கும் போது (ஊடகக் கலந்துரையாடல்களின் போது) தேவையான வீடியோ காட்சிகளை வழங்குதல்.

 • இப்பிரிவிலுள்ள கலைக்கூடத்தை சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் வெளியார் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குதல்.


எதிர்காலத் திட்டங்கள்
 • தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்து கலைக்கூடத்தை இற்றைவரைப்படுத்துதல்.

 • தொலைக்காட்சி நிகழ்சிகளைத் தயாரிக்கும் போது திறமைமிக்க இளைஞர் யுவதிகளை பயிற்றுவித்தல்.

 • தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் தொடர்பான டிப்ளோமா பாடநெறியை நடாத்துவதன் மூலம், தொலைக்காட்சி ஊடகம் தொடர்பாக கற்பதற்கு ஆர்வமுள்ள, ஆக்கத்திறனுள்ள இளைஞர் யுவதிகளது எண்ணக்கரு மற்றும் செயன்முறை அறிவை விருத்தி செய்வதன் மூலம், பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 • சினிமா கலை தொடர்பாக ஆர்வமுள்ள ஆக்கத்திறனுள்ள இளைஞர் யுவதிகளுக்காக குறும்பட போட்டிகளை நடாத்தி அதில் வெற்றி பெறுபவர்களை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அறிமுகப்படுத்துதல்.


இப்பிரிவானது தாபிக்கப்பட்டுள்ள இடத்தின் முகவரி
முகவரி

நிஸ்கோ வீடியோ பிரிவு,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ,

இல.65,

ஹைலெவல் வீதி,

மஹரகம.

தொ.பே

- 011-2850986 இணைப்பு 301/177

- ycfsrilanka@gmail.comContact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5095260