இளைஞர் கூட்டுறவு மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவு

பிரிவின் பிரதான நோக்கங்கள்

இளைஞர் சேவைகள் சட்டத்தின் 4 (ஏ) பந்தியிலுள்ளவாறு,

அரசாங்கத்தின் பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்தும் நோக்குடன் நீண்டகால அடிப்படையின் கீழ் வினைத்திறனாக நிதியை முதலீடு செய்து இளைஞர்களுக்கான முறையான தொழில் வழங்கலுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல், என்ற நோக்கத்தை அடைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.

இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட திகதி - 2015.07.01

பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள்
 • நிஸ்கோ கூட்டுறவு நடவடிக்கைகள் மற்றும் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கூட்டுறவு அமைப்பின் தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்.

 • இளைஞர் கூட்டுறவின் முன்னேற்றத்திற்கும் விரிவாக்கத்திற்கும் உரித்தான வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கும் பங்களிப்பை மேற்பார்வை செய்தல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

 • வர்த்தக வங்கிகள் மற்றும் வேறு நிதி நிறுவனங்கள் மூலமாக நிஸ்கோ அங்கத்தவர்களுக்கு சுய தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி வசதிகளை வழங்கும் செயற்திட்டங்களைத் திட்டமிட்டு நிஸ்கோ கூட்டுறவு அமைப்புடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்.

 • இளைஞர்களிடையே கூட்டுறவு அமைப்பு முறை எண்ணக்கருவை பரவலாக்குதல் மற்றும் கூட்டுறவுச் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு செயற்படுத்துதல்.

 • இளைஞர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிஸ்கோ கூட்டுறவுடன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல்.

 • இளைஞர்களை வர்த்தக துறையில் ஈடுபடுத்துவதற்காக முயற்சியாண்மை தொடர்பான பயிற்சிகள், தொழிநுட்ப பரிமாற்றல்கள் மற்றும் விற்பனை மேம்பாட்டு நிகழ்சிகளை திட்டமிட்டு செயற்படுத்துதல்.

 • இளைஞர்களுக்கு வர்த்தகங்களை ஆரம்பித்தல், விரிவாக்கல், அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து தகவல்களையும் வழங்குதல், ஆலோசனைகளை வழங்குதல், வழிகாட்டுதல், பின்னூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்குவதற்காக இளைஞர் முயற்சியாண்மை சேவை (YES) நிலையங்களை மாவட்ட மட்டத்தில் ஆரம்பித்து வர்த்தக அபிவிருத்தி சேவைகளை ஒரு கூரையின் கீழ் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை திட்டமிட்டு செயற்படுத்துதல்.

 • அமைச்சின் கீழ் செயற்படுகின்ற சிறு முயற்சியாண்மை அபிவிருத்தி பிரிவு மற்றும் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை போன்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இளைஞர்களுக்காக புதிய வர்த்தக வாய்ப்புகளை இனங்கண்டு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல், பயிற்சி மற்றும் வேறு உதவு சேவை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வர்த்தகத் துறையில் வருமானம் தேடும் மார்க்கங்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்களை ஊக்குவித்து ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.


இப்பிரிவினால் செயற்படுத்தப்படும் திட்டங்கள்
 1. முயற்சியாண்மை பயிற்சி நிகழ்ச்சிகள்

 2. பணிப்பாளர் சபை பயிற்சி நிகழ்ச்சிகள்

 3. நிதி நிலைபேற்றுத்தன்மை நிகழ்ச்சிகள்

 4. சுயதொழிலுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள்

 5. வியாபார ஆலோசனைச் சேவைகள்

 6. இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு உதவுதல்.

 7. சுயதொழில் மற்றும் வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கு தேவையான கடன் வசதிகளை வழங்குதல்.

 8. இளம் முயற்சியாளர்களுக்கு சந்தை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.


2017ஆம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்
 1. வர்த்தக தொழிநுட்ப பாடசாலை

 2. உள்நாட்டு உணவு வகைகளை உற்பத்தி செய்தலும் விற்பனை செய்தலும் (தேசிய உணவுகள்)

 3. மீன் உற்பத்தி தொடர்பான பயிற்சிகள்

 4. முயற்சியாண்மை பயிற்சி

 5. நிஸ்கோ அபிவிருத்தி செயற்பாடுகள்


தொடர்பு விபரங்கள்
முகவரி

இளைஞர் கூட்டுறவு மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவு,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,

இலக்கம் 65,

ஹைலெவல் வீதி,

மகரகமை.

தொலைபேசி மற்றும் தொலை நகல்

- 011-2837079 உள்ளக 203

- 011-2837073


Contact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5095531