ஊழியர்கள் நலன்புரிச் சங்கம்

நோக்கமும் குறிக்கோள்களும்

இந்த நலன்புரிச் சங்கத்தில் உள்ள அங்கத்தவர்களது பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியிலான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதுடன் சிக்கனம், பரஸ்பர ரீதியில் உதவுதல், ஆன்மீக ரீதியில் அவர்களை வலுப்படுத்துதல் தொடர்பான உணர்வுகளையும் செயற்பாடுகளையும் விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.


அங்கத்துவம்
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிரந்தர ஊழியர்கள்.

 • வரையறுக்கப்பட்ட இளைஞர் சேவைகள் கம்பனியின் ஊழியர்கள்.

 • நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள்.

 • சம்மேளன செயலகத்தில் பணியாற்றும் 05 வருடங்களுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு அங்கத்துவம் வழங்கப்படும்.


அங்கத்துவ பணம் - மாதாந்தம் ரூ,150.00 அறவிடப்படும். (இது மாற்றத்திற்குள்ளாகலாம்)

அங்கத்தவர்களது எண்ணிக்கை 1201 - (2016 தொடக்கம் தற்போது வரை )
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் - 1159

 • வரையறுக்கப்பட்ட இளைஞர் சேவைகள் கம்பனி - 34

 • நிஸ்கோ கூட்டுறவு சங்கம் - 07

 • சம்மேளன செயலகம் - 01


நன்மைகள்
 1. ஓய்வூதிய நன்மைகள்

  • அங்கத்தவர் ஒருவர் ஓய்வு பெறும் போது 05 தொடக்கம் 10வருட சேவைக் காலத்தைக் கொண்ட அங்கத்தவர்களுக்கு ரூ.3000.00வும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

  • 05 தொடக்கம் 10வருட அங்கத்துவத்தைக் கொண்ட, அங்கத்துவ நன்மைகளைப் பெறாத ஒரு அங்கத்தவருக்கு ரூ.10000.00 மும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

  • 10 வருடங்களுக்கு மேற்பட்ட அங்கத்தவர் ஒருவர் ஓய்வு பெறும் போது மரண உதவியைப் பெற்றிருந்தால் ரூ. 3000.00மும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

  • 10 வருடங்களுக்கு மேற்பட்ட அங்கத்தவர் ஒருவர் நன்மைகளைப் பெறாதிருந்தால் ரூ.25 000.00மும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

 2. மரண உதவு தொகை

  • 06 தொடக்கம் 05 வருடங்கள் வரை அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு அங்கத்தவரது ஒரு நாட் சம்பளத்தின் அரைவாசியை வழங்குதல்.

  • 05 வருடங்களுக்கு மேற்பட்ட அங்கதத்துவத்தைக் கொண்டிருந்தால் ஒரு நாள் சம்பளத்தை வழங்குதல்.

  • அங்கத்தவர் ஒருவர் இறக்கும் சந்தர்ப்பத்தில் பொதுவான மரண உதவு தொகையாக ரூ.20,000 .00 மட்டும் செலுத்துதல்.

  • அங்கத்தவரது கணவன்/மனைவி இறக்கின்ற சந்தர்ப்பத்தில் (அங்கத்தவரது கணவன் /மனைவி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவராக இல்லாத சந்தர்ப்பத்தில்) அங்கத்தவர்களிடமிருந்து ரூ.100 .00 நன்கொடையாக வழங்கப்படும்.


அங்கத்தவரில் தங்கி வாழ்வோருக்கு பொதுவான மரண உதவு தொகை வழங்குதல்.
 • அங்கத்தவரது தாய், தந்தை, மாமா, மாமி, விவாகமாகாத பிள்ளைகள், மனைவி அல்லது கணவன் ஆகியோருக்கு மரண உதவிகள் வழங்கப்படும். விவாகமாகாத சகோதரர்களுக்கும் ரூ. 20,000 .00 தொகை வழங்கப்படும்.

 • ஆகக் கூடியதாக 04 மரண உதவிகளே வழங்கப்படும்.

 • மரண உதவு தொகை வழங்குதல்.

  1. 01 மாதம் தொடக்கம் ௦6 மாதம் வரை எந்தவொரு பணக் கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

  2. 06 மாதம் தொடக்கம் 05 வருடங்கள் வரை மரண உதவு தொகையானது அரைவாசியாக இரண்டு தடவைகள் கொடுப்பனவு செய்யப்படும்.

  3. 05 வருடம் தொடக்கம் 10 வருடம் வரை முழுமையான மரண உதவு தொகை இரண்டு, கொடுப்பனவு செய்யப்படும்.

  4. 10 வருடங்களுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு 04 மரண உதவு தொகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 10 வருடங்களுக்குக் குறைந்த அங்கத்தவர்களுக்கு மேலே கூறப்பாட்ட (இ), (ஈ ) எல்லைக்குள் இரண்டு மரண உதவு தொகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.


போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் தொகை
 • அங்கத்தவர் ஒருவரது மரணத்தின் பொது எரிபொருள் கொடுப்பனவாக ரூ.15000.00 தொகை வழங்கப்படும்.

 • பிரதான அலுவலகத்தின் மரணச் சடங்குகளுக்கு ஆக்கக் கூடியது ரூ.8500.00க்குட்பட்டும் மாகாணக் காரியாலயம், மாவட்டக் காரியாலயம், பயிற்சி நிலையங்கள் என்பவற்றுக்கு ரூ.7000.00க்குட்பட்டும் எரிபொருள் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.


ஏனைய நன்மைகள்
 • அங்கத்தவரது விவாக நிச்சயதார்த்தத்திற்கு ரூ.2000.00 செலுத்துதல்.

 • அங்கத்தவரது பிள்ளையொன்று 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் ரூ.1000.00 பரிசு வவுச்சர் வழங்கப்படும்.

 • அங்கத்தவரது குடும்பத்தில் குழந்தையொன்று பிறந்தால் ரூ.1000.00 தொகை வைப்புச் செய்யப்பட்டு கணக்கொன்று குழந்தையின் பெயரில் ஆரம்பிக்கப்படும்.

 • அங்கத்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஒரு நாளுக்கு ரூ.200.00 வீதம் ரூ.4000.00இற்கு மேற்படாதவாறு வைத்திய உதவி வழங்கப்படும்.

 • திடீர் விபத்தின் போது ரூ.6000.00 விசேட வைத்திய உதவி வழங்கப்படும்.

 • அங்கத்தவர் இருதய சத்திர சிகிச்சை, சிறுநீரக சத்திர சிகிச்சை மற்றும் புற்றுநோய் போன்ற பாரிய சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளாகும்போது அங்கத்தவர்களால் ரூ.100.00 வீதம் வழங்கப்படும்.

 • விழா முற்பணம் வழங்கப்படும்.


கடன் தொகை

7% வருடாந்த வட்டிக்கு ஆகக் கூடியது 15000.00 வரை கடன் வழங்கப்படும்.


வேறு நலன்புரிச் செயற்பாடுகள்
 • வருடாந்தம் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு செய்யப்படுகின்ற போதி பூஜை. (மார்ச் முழு நோன்மதி தினம்)

 • பொசன் சவ்வரிசி கஞ்சி தானம் வழங்குதல்.

 • இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் பொருட்கள் சேவைகளை வழங்குதல்.

 • வைத்திய சேவைகளை வழங்குதல்.

 • தேவைக்கேற்றவாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற நலன்புரி சேவைகளை வழங்குதல்.Contact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5095207